வாக்குகளுக்காக சர்வதேச பங்களிப்பை அரசு ஏற்காது

4544 0

Gajan ponnambalamஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகியோர் பொறுப்­புக்­கூறல் பொறிமு­றையில் வெளி­நாட்டு பங்­கு­பற்றல் இருக்­காது என்ற வாக்­கு­று­தியை தமது வாக்கு வங்­கி­யா­கிய சிங்­கள மக்­க­ளுக்கு தொடர்ச்­சி­யாக தெரி­வித்து வரு­கி­றார்கள் என்­பது புரிந்து கொள்ளப்­பட வேண்டும். இச்­செ­யற்­பா­டுகள், பொறுப்புக் கூறல் விட­யத்தில் அரசின் அர­சியல் விருப்­பின்­மையை தெட்­டத்­தெ­ளி­வாக பிர­தி­ப­லிக்­கின்­றது என்று ஜெனிவா மனித உரிமை பேர­வையில் தமிழர் தரப்பு பிர­தி­நி­திகள் தெரி­வித்­துள்­ளனர்.

நீதி வழங்கும் விசா­ரணை பொறி­மு­றை­யா­னது சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளையும் வழக்­க­றி­ஞர்­க­ளையும் விசா­ர­ணை­யா­ளர்­க­ளையும் உள்­ள­டக்க வேண்­டி­யதை ஐ.நா. உறு­திப்­ப­டுத்த வேண்டும். இலங்­கையின் வடக்கு, கிழக்கில் ஐ.நா. மனித உரிமை அலு­வ­ல­கத்தை திறக்க வேண்டும். வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை அகற்ற ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழர் பிர­தி­நி­திகள் ஜெனி­வாவில் சுட்­டிக்­காட்­டினர்.

பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் வெளி­நாட்டு பங்­கு­பற்றல் என்ற அடிப்­படை வாக்­கு­று­தி­யி­லி­ருந்து இலங்கை அர­சாங்­க­மா­னது வில­கா­தி­ருக்க, உறுப்பு நாடுகள் காத்­தி­ர­மான நட­வ­டிக்கை எடுக்­கும்­படி நாம் அவர்­களை ஆணித்­த­ர­மாக வேண்டி நிற்­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்­டனர்.

ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நேற்­றைய தினம் இடம்­பெற்ற இலங்கை தொடர்­பான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இலங்கை தமிழர் பிர­தி­நி­திகள் பிர­தி­நி­திகள் மற்றும் புலம்­பெயர் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர்.இந்த விவா­தத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் உரை­யாற்­று­கையில்,இலங்கை அர­சாங்­கத்தின் நீதித்­து­றை­யா­னது நம்­ப­கத்­தன்­மை­யற்­றது என்­பதால், சுயா­தீ­னா­ம­னதும் பக்­கச்ச்­சார்­பா­ன­து­மான பொறுப்­புக்­கூறல் செயன்­மு­றைக்கு
சர்­வ­தேச பங்­க­ளிப்பு அத்­தி­யா­வ­சி­ய­மான ஒரு கடப்­பாடு என்­பதில் மனித உரி­மைகள் பேர­வையின் ஆணை­யாளர் தொடர்ந்தும் பற்­று­று­தி­யுடன் இருப்­பதை நாங்கள் வர­வேற்­கிறோம்.

இலங்கை அர­சாங்­கத்­தினால் இழைக்­கப்­பட்ட பெரும் குற்­றங்­க­ளினால் பெரிதும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கிய தமி­ழர்­களும், இதே கர­ணத்­திற்­கா­கவே, பொறுப்­புக்­கூறல் செயன்­மு­றைகள் உள்­ளக ரீதி­யாக நிர்­வ­கிக்­கப்­ப­டு­வதை நிரா­க­ரித்தும், சர்­வ­தேச பொறுப்­பு­கூறல் செயன் முறை­க­ளையும் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தியும் வரு­கி­றார்கள்.
இருந்த போதிலும், துர­திர்ஷ்­ட­வ­ச­மாக இச்­ச­பையில் (2015 ஒக்­டோபர்) நிறை­வேற்­றப்­பட்ட 30/1 இலக்க தீர்­மா­ன­மா­னது, ஏறத்­தாழ ஒரு உள்­ளகப் பொறி­மு­றை­யி­னையே வலி­யு­றுத்­து­வ­துடன் அதில் வெளி­நாட்டு மற்றும் பொது­ந­ல­வாய நாடு­களை சேர்ந்த நீதி­ப­திகள், வழக்­குத்­தொ­டு­நர்கள், வழக்­க­றி­ஞர்கள் மற்றும் விசா­ர­ணை­யா­ளர்­களை ஈடு­ப­டுத்­து­வதை ஊக்­கு­விப்­ப­தாக தெரி­வித்து இருந்­தது.

இப்­ப­டி­யாக, குறிப்­பி­டத்­தக்க தளர்­வு­போக்கை இலங்கை அர­சுக்கு, மனித உரி­மைகள் பேரவை வெளிப்­ப­டை­யாக காட்­டி­யி­ருந்த போதிலும், அர­சாங்­க­மா­னது ( சர்­வ­தேச பங்­க­ளிப்பை கோரு­கின்ற) பொறுப்­புக்­கூறல் செயன்­மு­றையின் மிக அடிப்­ப­டை­யான விட­யத்­தி­லி­ருந்து பின்­வாங்­கிச்­செல்­வதில் மிக­மு­னைப்­புடன் செயற்­ப­டு­கின்­றது.

இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்சர் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் வெளி நாட்டு பங்­கு­பற்றல் தொடர்­பாக இந்த அவைக்கு எந்த ஒரு வாக்­கு­று­தியை வழங்­கி­னாலும், அரசில் அவ­ரை­விட பொறுப்பும் அதி­கா­ரமும் மிக்க ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் போன்­ற­வர்­களே இந்த அவைக்கு வழங்­கப்­படும் வாக்­கு­று­தி­களை தொடர்ச்­சி­யாக நிரா­க­ரித்­தது வரு­கி­றார்கள். அதா­வது இலங்­கையின் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகியோர் சிங்­கள மக்­க­ளுக்கு பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை யில்வெளி­நாட்டு பங்­கு­பற்றல் இருக்­காது என்ற வாக்­கு­று­தியை தமது வாக்கு வங்­கி­யா­கிய சிங்­கள மக்­க­ளுக்கு தொடர்ச்­சி­யா­கவும் தெரி­வித்து வரு­கி­றார்கள் என்­பது புரிந்து கொள்­ளப்­பட வேண்டும். இச்­செ­யற்­பா­டுகள், பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் அரசின் அர­சியல் விருப்­பின்­மையை தெட்­டத்­தெ­ளி­வாக பிர­தி­ப­லிக்­கின்­றது.

தமி­ழ­ருக்கு எதி­ராக இழைக்­கப்­பட்ட குற்­றங்­க­ளுக்­கான தண்­ட­னை­களில் இருந்து குற்­ற­வா­ளி­களை தப்­ப­வைக்கும் விட­யத்தில் தொடர்ச்­சி­யாக ஆட்­சிக்கு வந்த இலங்கை அர­சுகள், உறு­தி­யாக இருந்து வந்­துள்­ளன.தமிழ் மக்கள், தமக்கு எதி­ராக இன அழிப்பு நடை­பெற்­றது என்ற குற்­றச்­சாற்றை முன் வைக்கும் நிலையில், பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் வெளி­நாட்டு பங்­கு­பற்றல் என்ற அடிப்­படை வாக்­கு­று­தி­யி­லி­ருந்து இலங்கை அர­சாங்­க­மா­னது வில­கா­தி­ருக்க, உறுப்பு நாடுகள் காத்­தி­ர­மான நட­வ­டிக்கை எடுக்­கும்­படி நாம் அவர்­களை ஆணித்­த­ர­மாக வேண்டி நிற்­கின்றோம் என்றார்.

வட மாகாண சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம் விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கையில்
விசா­ரணை பொறி­மு­றையில் வெளி­நாட்டு நீதி­ப­திகள் இடம்­பெற மாட்­டார்கள் என அர­சாங்கம் கூறி­யுள்­ளது. இத­னை­யிட்டு தமிழ் மக்கள் ஆச்­ச­ரியம் அடை­ய­வில்லை. காரணம் தமிழ் மக்கள் இலங்­கை­யி­ட­மி­ருந்து நீதியை எதிர்­பார்க்­க­வில்லை. இலங்கை சர்­வ­தேச நீதி­ப­திகள் தொடர்பில் ஐ.நா.வுக்கு வாக்­கு­று­தியை அளித்­து­விட்டு தற்­போது அதனை முடி­யாது என்று கூறு­வது என்றால் தமிழ் மக்கள் விட­யத்தில் எவ்­வாறு செயற்­ப­டு­கின்­றது என்­பதை சிந்­தித்து பாருங்கள்.

கடந்த கால வர­லா­று­களை பார்க்­கும்­போது இலங்­கை­யினால் தமிழ் மக்­க­ளுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடி­யாது என்­பது தெ ளிவா­கின்­றது. சர்­வ­தேச தலை­யீடு இன்றி தமிழ் மக்­க­ளுக்கு நீதி கிடைக்­காது. தமி­ழர்­களை ஆக்­கி­ர­மித்துக் கொண்டு ஆட்­சி­யா­ளர்கள் நல்­லி­ணக்கம் பற்றி பேசு­கின்­றனர். தமிழ் மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­டாமல், அவர்­களின் அர­சியல் உரிமை உறு­திப்­ப­டுத்­த­ப­டாமல் எந்­த­வொரு நல்­லி­ணக்­கமும் அடை­யப்­பட முடி­யாது.

எனவே நீதி வழங்கும் விசா­ரணை பொறி­மு­றை­யா­னது சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளையும் வழக்­க­றி­ஞர்­க­ளையும் விசா­ர­ணை­யா­ளர்­க­ளையும் உள்­ள­டக்க வேண்­டி­யதை ஐ.நா. உறு­திப்­ப­டுத்த வேண்டும். இலங்­கையின் வடக்கு, கிழக்கில் ஐ.நா. மனித உரிமை அலு­வ­ல­கத்தை திறக்க வேண்டும். வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை அகற்ற ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

இந்த விவா­தத்தில் ஈழத் தமிழ் மக்கள் சர்­வ­தேசப் பேர­வையின் வெளி­வி­வ­கார அலுவலர் டி. திருக்குலசிங்கம் உரையாற்றுகையில்,இலங்கையில் காணி விவகாரம் விரைவாக தீர்க்கப்பட வேண்டும். அதிகளவான காணிகள் இராணுவ வசமே உள்ளன. 4000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய காணிகளும் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும். இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிறந்த வரலாறை கொண்டு இருக்கவில்லை.

தற்போது அமைக்கப்பட்டுள்ள காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் குறித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அரசாங்கம் வந்து 18 மாதங்கள் கடந்துவிட்டபோதும் இன்னும் நீதிப்பொறிமுறைய எவ்வாறு அமையும் என கூறப்படவில்லை. தலைவர்கள் முரண்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றனர். இராணுவத்தை குறைத்தல், காணிகளை மீள் வழங்குதல், சர்வதேச விசாரணை பொறிமுறையை நிறுவுவதல் என்பன தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றார்.

Leave a comment