இஸ்தான்புல் விமான நிலைய தாக்குதலில் 13 பேர் கைது

507 0

201606301753058907_13-detained-over-Istanbul-airport-attack_SECVPFஇஸ்தான்புல் விமான நிலைய தாக்குதல் தொடர்பாக 13 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு அடுத்தடுத்து மூன்று இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டும், மனித வெடிகுண்டுகள் மூலமாகவும் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த 13 பேர் உள்பட 42 பேர் பலியாகி உள்ளனர். 200-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தையடுத்து விமான நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, ஐ.எஸ். தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை கைது செய்துவருகின்றனர்.

இஸ்தான்புல் முழுவதும் இன்று அதிகாலையில் 16 இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின்போது வெளிநாட்டைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 13 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியது ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என துருக்கி அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment