அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தல் குறித்து இந்த சந்திப்பில் அதிகம் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை அன்றைய தினமே தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

