நாட்டைக் காட்டிக் கொடுத்த ஜெனீவா அறிக்கையை சரி செய்ய வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடுவெல பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மக்கள் சந்திப்பில் தினேஷ் குணவர்தன மேலும் கூறியுள்ளதாவது, “ஜெனீவா தீர்மானம் உட்பட, நாட்டுக்கு எதிரான அனைத்து திட்டங்களும் ஒவ்வொன்றாக திருத்தப்பட்டு வருகின்றது.
மேலும் எமது போர் வீரர்களின் பாதுகாப்பிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட தவறான அறிக்கை குறித்து சர்வதேசத்துக்கு முதலில் தெளிவுப்படுத்த வேண்டும்.
இதேவேளை எதிர்காலத்தில், உள்ளூராட்சி அதிகாரிகளிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரம் மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்” என சுட்டிக்காட்டினார்.

