தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான விடயங்கள் மற்றும் புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.
இதேவேளை தேர்தல்கள் காலங்களின் போது ஊடகங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பாக புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான 143 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று முன்தினம் மாலை 4 மணியுடன் நிறைவடைந்ததாகவும் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணையகம் முன்னெடுக்கும் என ஆணையகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

