பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவான கோப் குழு நேற்று (18) கூடியது.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் வௌிநாட்டு பணியாளர்களுக்கு காப்பீடு பெற்றுக் கொடுப்பதற்கு வௌிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய முறைகேடுகள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
அவர்களால் வழங்கப்பட்ட பதில்கள் அனைத்தும் தவறானவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் எந்தவொரு குறிப்புக்களும் இல்லை என தெரிவித்த அவர், ஒரு காப்பீட்டு திட்டத்தின் மூலம் 100 அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த காப்பீட்டு திட்டத்திற்காக இரண்டு நிறுவனங்களில் டென்டர் அழைக்கப்பட்டதாகவும், பணிப்பாளரால் தனக்கு விருப்பமான நிறுவனங்களுக்கு டென்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், இது பல பில்லியன் ரூபாய் மோசடி என குறிப்பிட்டுள்ளார்.
இந்த காப்பீட்டு திட்டம் முலம் வௌிநாட்டு பணியாளர்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கவில்லை என கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

