சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.31,624-க்கு விற்பனையாகிறது.தங்கம் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரு கிராம் ரூ.3926-க்கும், ஒரு பவுன் ரூ.31,408-க்கும் விற்பனை ஆனது. இன்று கிராமுக்கு ரூ.27 அதிகரித்து ரூ.3,953-ஆகவும் பவுனுக்கு ரூ.216 அதிகரித்து ரூ.31,624 ஆகவும் உயர்ந்தது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து 51.60க்கும், கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து ரூ.51 ஆயிரத்து 600க்கு விற்பனை ஆகிறது.

