டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு- அமைச்சர் ஜெயக்குமார்

305 0

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்பு இருப்பதாக தி.மு.க. சார்பில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் வெளிப்படையாகவே ஜெயக்குமார் மீது புகார் கூறி இருந்தார்.

இதையடுத்து தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் திடீரென குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று அளித்த பேட்டி வருமாறு:-

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு குறித்து 2006-ம் முதல் 2011-ம் ஆண்டு வரை விசாரணை நடத்தப்படும்.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, வீரபாண்டி ஆறுமுகம், அந்தியூர் செல்வராஜ் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது.
திமுக

தி.மு.க. ஆட்சியில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் அவர்கள் சிறைக்கு செல்வார்கள். இதற்கான சிபாரிசு கடிதங்கள் சிக்கியுள்ளன. டி.என்.பி.எஸ்.சி. நடத்திய மோட்டார் ஆய்வாளர்கள் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது.

இப்போது எடுக்கப்படும் நடவடிக்கையின் மூலம் எதிர்காலத்தில் டி.என்.பி.எஸ்.சி.யில் தவறுக்கு வழியில்லாத நிலை உருவாகும்.

ஊடக நண்பர்கள் குறித்து தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கூறிய கருத்து வருத்தம் அளிக்கிறது. பண்பற்றவர்களிடம் பண்பற்ற வார்த்தைகள்தான் வரும்.

மழையிலும் வெள்ளத்திலும் தன்னலம் பாராமல் உழைப்பவர்கள் மீது அவர் வீண்பழி போட்டுள்ளார்.

நாங்கள் மத்திய அரசுக்கு கொடுத்து கடிதத்தை வெளி ட்டு உள்ளோம். முரசொலி மூல பத்திரம் எங்கே?

இவ்வாறு அவர் கூறினார்.