முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு காமராஜர் பேத்தி பாராட்டு

368 0

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு காமராஜர் பேத்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.காமராஜரின் கல்வி மேம்பாட்டு மைய தலைவியும் பெருந்தலைவர் காமராஜரின் பேத்தியுமான வி.எஸ்.கமலிகா காமராஜர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் 27 ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டும். நன்றியும் தெரிவித்து கொள்கிறேன். பெருந்தலைவரால் 1956-ம் ஆண்டு மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது.பின்பு 1982-ல் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டமாக அறிவித்து தொடர்ந்து வழங்கப்பட்டது.

காலை உணவு உட்கொள்ளாத குழந்தைகள் வகுப்பில் பாடங்களை சரிவர கவனிக்க முடியாது என்பதை உணர்ந்து காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வருக்கு நன்றி கூறுகிறேன். இத்திட்டத்தால் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பயனடைவதை போன்று கிராமப்புற மாணவர்களும் பயனடையும் வகையில் தமிழக அரசு விரிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.