தமிழக அரசின் 3 ஆண்டு சாதனை மலர்- முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்

250 0

தமிழக அரசின் 3 ஆண்டுகள் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். முதல் பிரதியை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

4-ம் ஆண்டு தொடக்க விழா இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அரசின் 3 ஆண்டுகள் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

முதல் பிரதியை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.
தமிழக அரசின் சாதனை மலர் வெளியிட்டு விழாவில் பங்கேற்றவர்கள்.

நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உயர்அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

அமைச்சர்கள் அனைவரும் பூங்கொத்துகள் வழங்கி எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.