போட்டியாளனின்றி காய் நகர்த்தும் செல்வம்?

208 0
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் செல்வம் அடைக்கலநாதனின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் வேறு நபர்கள் தனது கட்சி மூலம் வெல்வதை தடுக்க அவர் முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதன் தொடர்ச்சியாகவே சிறீகாந்தா,சிவாஜி மற்றும் விந்தனை யாழில் கழற்றிவிட்டதாக ஆதரவாளர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
அவ்வகையில் வெற்றிக்கு சாத்தியமற்ற சுரேன் யாழில் கழம் இறக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.
இதனிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் அரசாங்கத்திற்கு துணை போகாது என தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் கட்சியின் மாவட்ட காரியாலயத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது சுயநலனை கருத்திற்கொண்டு செயற்பட்டதாக சில தமிழ்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்கள் கவலையளிப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.டெலோ தற்போது நான்கு பிரிவுகளாக பிளவுண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.