கிளிநொச்சிக்கு நரம்பியல் வைத்திய நிபுணர் நியமனம்!

32 0
 

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வரலாற்றில் முதற்றடவையாக நரம்பியல் வைத்திய நிபுணர்  ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வரலாற்றில் இதுவரை காலமும் நரம்பியல் வைத்தியர் ஒருவர் இன்றியே காணப்பட்டு வந்த நிலையில், முதற்றடவையாக   தற்போது நரம்யில் வைத்திய நிபுணர்  ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும்  நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் வவுனியா  வைத்தியசாலைகளுக்குச் சென்ற நோயாளிகள் இனிவரும் நாள்களில்  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்  தங்களது சிகிச்சையைப்  பெற்றுக்கொள்ள முடியும்.