அனுராதபுரத்தில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைதுசெய்ப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 90 5000 ரூபா நாணயத்தாள்களும், 47 ஆயிரம் ரூபா தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவளை நாட்டில் இவ்வாறான சட்டவிரோத நாணயத்தாள்களை வைத்திருப்பவர்கள், அதனை அச்சிடுபவர்கள், பறிமாற்றம் செய்பவர்கள் தொடர்பான தகவல்கள் அறிந்தால் 0112422176 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

