வெட்டு காயங்களுடன் வீதியில் விழந்து கிடந்த ஒருவர் பலி

332 0
தெஹிவளை பகுதியில் வெட்டு காயங்களுடன் வீதியில் விழந்து கிடந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு (11) இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த நபரை மீட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட பிணக்கை அடுத்து கூரிய ஆயுதம் ஒன்றில் தன்னைதானே தாக்கிக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

35 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.