இதயம் சின்னத்திற்கு அனுமதி கிடைக்காது – சுசில்

326 0

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் இதய சின்னத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடைக்காதென இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் மேலும் கூறியுள்ளதாவது, “யானை சின்னத்திற்கும் இதய சின்னத்திற்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் உண்டு.

மேலும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான பொதுக்கூட்டணி விவகார முரண்பாடுகள் இன்று  எதிர்தரப்பில் சூடுப்பிடித்துள்ளன.

அத்துடன் கட்சியின் முரண்பாடுகள் ஆளும் தரப்பிற்கு பலம் சேர்க்கும் விதமாகவே அமையும். இதனால் பொதுத்தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சி  தோல்வியே அடையும்.

மேலும் சஜித்தின் இதயம் சின்னத்திற்கும் ஒருபோதும் அனுமதி கிடைக்கப்போவதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

0Shares