உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மட்டு காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 65 பேருக்கும் தொடர்ந்து இன்று (11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டார்.
குறித்த குண்டு தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஸஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதிகள் மேற்கொண்டனர். இந்த சம்பவத்தையடுத்து ஸஹ்ரானின் ஊரான காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 64 பேரை ஸஹ்ரானின் அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா பயிற்சி முகாமில் பயிற்றி பெற்ற மற்றும் அந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட 64 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 2 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 62 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்
இதனையடுத்து வாரியபொல பிரதேசத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 3 பேரையும், விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 62 பேருடன் சேர்த்து 65 பேரை இன்று (11) நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

