யோகா, தியானத்தால் குற்றமற்ற இந்தியாவை உருவாக்க முடியும் என்றும் யோகாவுக்கு மதம் இல்லை இது ஒரு ஆன்மீகம் என்றும் பதஞ்சலி யோகா அமைப்பின் நிறுவனர் பாபா ராம்தேவ் கூறி உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி கூட்டு ரோட்டில் உள்ள சிவபார்வதி மைதானத்தில் இன்று காலை 5 மணிக்கு யோகா பயிற்சி வகுப்பு தொடங்கியது. இந்த பயிற்சி வகுப்பை பதஞ்சலி யோகா அமைப்பின் நிறுவனர் பாபா ராம்தேவ் தொடங்கி வைத்து பேசியதாவது:

கண், காது, மூக்கு, கழுத்து, கருப்பை, முழங்கால் மூட்டு மாற்று போன்ற அனைத்து வகையான செயல்பாடுகளையும் தவிர்க்கலாம்.
இவ்வாறுஅவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
யோகா- தியானத்தால் குற்றமற்ற இந்தியாவை உருவாக்க முடியும். யோகாவுக்கு மதம் இல்லை. இது ஒரு ஆன்மீகம் – அறிவியல் சம்பந்தப்பட்டது. யோகாவையும், தியானத்தையும் 1 மணி நேரம் செய்தால் எல்லா நோய்களையும் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம்.
யோகா மூலம் போதை, நோய்கள், வறுமை, வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும். யோகா தைரியத்தை அளிக்கும். மகிழ்ச்சிக்கும், நிம்மதியான வாழ்க்கைக்கும் உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.

