உயர் கல்வியைத் தொடர்வதற்காக இலங்கையர்கள் வெளிநாடு செல்வதால் ஆண்டு தோறும் சுமார் 50 பில்லியன் ரூபாயை இழக்க நேரிடுவதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் குணவர்தன, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேருவதற்காக ஆண்டுதோறும் 20,000 மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என கூறினார்.
உயர்கல்வியை முடித்த பின்னர் பல்வேறு சலுகைகளை வழங்குவதன் மூலம் பல மோசடியாளர்களும் வணிகர்களும் மாணவர்களை குறிவைப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் நாட்டில் உள்ள பல்கலைக்கழக அமைப்பை மோசடி செய்பவர்களாலும், ஊதியம் பெற்ற குண்டர்களாலும் நாசப்படுத்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டார்.

