திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் வெளிநாட்டு சிகரெட்டுடன் ஒருவரை தாம் கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத் தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்பபட்டவரிடம் இருந்து வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 600 சிகரெட்களை கைப்பற்றப்பட்டதாக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் கிண்ணியா – 3 பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவரையும் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

