பலி எண்ணிக்கையை மறைக்கிறதா சீன அரசு?

280 0

சீனா அரசு கொரோனா மூலம் ஏற்பட்ட பலி எண்ணிக்கை குறித்து பல விஷயங்களை மறைகிறது என்று புகார் எழுந்துள்ளது. அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் பலி எண்ணிக்கையே உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை என்றும் மக்கள் புகார் வைக்கிறார்கள்.

சீனாவில் கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 636 ஆகி உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 3143 பேர் இந்த நோய் தாக்குதலால் பலியாகி இருக்கிறார்கள். சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 73 பேர் ஒரே நாளில் பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்நாட்டு மக்களை இது அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மொத்தம் 31161 பேர் சீனாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சீனா இந்த பலி எண்ணிக்கை குறித்து பல விஷயங்களை மறைகிறது என்று புகார் எழுந்துள்ளது. அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் பலி எண்ணிக்கையே உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை. அங்கு இதைவிட அதிகமான நபர்கள் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் பலி எண்ணிக்கை 700ஐ தாண்டி இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் சீன அரசு மக்களை சமாதான படுத்த வேண்டும் என்று இதை மறைக்கிறது என்று கூறுகிறார்கள்.

சீனாவில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தவறியதால் மக்கள் அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார். டிசம்பர் இறுதியிலேயே இந்த வைரஸ் தாக்குதல் குறித்து அந்நாட்டு அரசுக்கு தெரிந்தது. ஆனால் அந்த விஷயத்தை வெளியே தெரிவிக்காமல் அரசு மறைத்துவிட்டது. இதனால் அந்நாட்டு அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இந்த அரசை கவிழ்க்க வேண்டும். உடனடியாக அரசை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள்.

 

இதனால் சீன அரசு இந்த பலி எண்ணிக்கை குறித்த உண்மைகளை மறைத்து வருகிறது. அந்நாட்டு மருத்துவர்களே இந்த புகாரை அடுக்கி இருக்கிறார்கள். எங்கள் மருத்துவமனையில் பலர் இதனால் பலியாகி உள்ளனர். ஆனால் அவர்களை எல்லாம் சீன அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும் சிலர் எப்படி இறந்தார்கள் என்று கூட கண்டுபிடிக்கப்படவில்லை. பலருக்கு சோதனை செய்ய கூட அரசு அனுமதி அளிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

அதேபோல் சீனாவில் தற்போது செய்தி நிறுவனங்களும் இதனால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பொருளாதாரமே பாழாய் போய்விட்டது. இதனால் இந்த வைரஸ் குறித்து பேசுவதை செய்தி நிறுவனங்கள் குறைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் சீனா அரசு பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சீன அரசால் இந்த வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.