துருக்கி விமான நிலைய தாக்குதல் தொடர்பில் பலர் கைது

14041 0

Daily_News_788646936417துருக்கி – அதாடர்க் விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இந்த தாக்குதலை நடத்திய மூன்று பேரும், முன்னாள் சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 43 பேர் பலியாகினர்.

மேலும் 230 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்திய 3 தீவிரவாதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment