வழக்கை ஒத்தி வைக்குமாறு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவு

470 0

SUPREME_COURTலோதா குழுமத்தின் பரிந்துரைகளுக்கு எதிராக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தொடுத்திருந்த வழக்கினை இந்திய உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து, முன்னாள் நீதியரசர் லோதா தலைமையிலான நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும் இந்த பரிந்துரைகளுக்கு எதிராக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இந்திய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்துள்ள போதும், தீர்ப்பு வழங்கும் தினம் குறிப்பிடப்படாமல், வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.

Leave a comment