திருகோணமலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்து!

327 0

திருகோணமலை தம்பலகாமம் 99 ஆம் கட்டை பகுதியில் இரண்டு பேருந்துகள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, 99ம் கட்டைப் பகுதியில் பயணிகளை இறக்கி கொண்டிருந்த பேருந்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதன்போது, காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.