யாழில் தமிழ் மாணவி தற்கொலை.!

274 0

வட தமிழீழம் , யாழில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

யாழ் புகையிரதநிலைய வீதி பகுதியில் வசித்துவரும் சிவரூபன் றிஸ்வினி (17) எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் (04 ) பதினொரு மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த மாணவியின் சடலம் இன்று (05) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாணவி தூக்கிட்டமைக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை  சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இளம் பராயத்தினர் இவ்வாறாக தற்கொலை செய்வது அண்மைக்காலமாக தொடர்கதையாகிவருகின்றது. பிள்ளைகளை படிக்க வைப்பதற்கு பெற்றோர்கள் தினமும் பாடுபடும் நிலையில் பிள்ளைகள் இப்படியாக தவறான முடிவெடுப்பது வருத்தத்திற்குரியது.

அவ்வாறே இம் மாணவியின் பெற்றோரும் குடும்ப சூழலை பொருட்படுத்தாமல் மகளின் கல்விக்கு அயராது உழைத்துவந்த நிலையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமை மாணவியின் குடும்பத்திற்கு ஆறாத்துயரை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.