கோயில் உண்டியலை உடைத்த நபர் கிராமத்து மக்களால் மடக்கிப் பிடிப்பு!

457 0

இன்று அதிகாலை மூன்று மணியளவில்  வட தமிழீழம் , யாழ் கோப்பாய் தெற்கு பேச்சியம்மன் கோயில் உண்டியலை உடைத்த நபர் கிராமத்தவர்களால் மடக்கிப் பிடித்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணை மெற்கொள்ளப்பட்டு வருகின்றது.விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என  சிறிலங்கா  காவல்துறை தெரிவித்துள்ளனர்.

 

முக்கிய குறிப்பு:
தமிழீழப்பிரதேசம் முழுமையாக சிங்கள இனவாத அரசின் இராணுவத்தாலும் காவற்துறையினாலும் உளவுப்பிரிவினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் அவர்களிற்கு தெரியாமல் கொலைகள் கொள்ளைகள் போதைபொருள் கடத்தல்கள் கற்பழிப்புக்கள் நடைபெறமுடியாதென்பது அனைவரிற்கும் தெரிந்த விடயமாகும். சிங்கள அரசின் இனப்படுகொலையின் ஓர் பகுதியாக விளங்கும் போர்க்குற்றம், மானிடத்திற்கெதிரான குற்றம் போன்றவற்றிற்கு எதிராக ஜ.நா.வில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் தமிழ்மக்கள் மீது தனிப்பட்ட ரீதியில் தாக்குதல்களை நடாத்தி போர்க்குற்றச்சாட்டுகளிற்கு சாட்சிகளாக இருப்பவர்களை அகற்றுவதையே சிங்கள இனவாத அரசு செய்கின்றது. இதை விளங்கிக்கொண்டு இவ்விடயத்தினை சர்வதேச நிறுவனங்கள் மூலம் வெளிக்கொண்டு வருவது பொறுப்பான அரசியல் தலைமைகளின் கடப்பாடாக அமைகின்றது.