அல்லைப்பிட்டியைச் சேர்ந்த மகேஸ்வரநாதன் கிரிஷன் இயற்கை விவசாயத்தில் பாராம்பரிய நெற் செய்கையினை மேற்கொண்டு வெற்றியீட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் இயற்கை விவசாய முறையில், நெற்செய்கை செய்த விவசாயியின் விளைச்சலை இந்தியத் துணைத்தூதுவர் கே.பாலச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது இயற்கை விவசாயிக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இயற்கை விவசாயியான கிரிஷன், பாராம்பரிய விதை நெல் இனங்களான மொட்டைக் கறுப்பன், சுகந்தன் போன்றவற்றை இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி பயிர்ச்செய்கை மேற்கொண்டிருந்தார்.
அத்தோடு, பாராம்பரிய நெல் இனங்களை விதைக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட அல்லை இயற்கை விவசாயின் நோக்கம் பாராட்டத்தக்கது என்றும், இயற்கை விவசாயம் தொடர்பில் வழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே இந்தியத் துணைத்தூதுவர் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தையில், அல்லை இயற்கை விவசாயின் இலைக்கஞ்சி பொதுமக்களிடையே வரவேற்பினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

