உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்து கடந்த 9 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 26 வயதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதியின் இறுதி கிரியைகள் இன்று (03) இடம்பெறவுள்ளன.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் காயமடைந்த அவர் வட கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (01) உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாக கொண்ட அவர் கொட்டாஞ்சேனை பகுதியில் தொழில்புரிந்து வந்த நிலையில் குறித்த தாக்குதலுக்கு இலக்காகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

