நோபல் பரிசுக்கு கிரேட்டா துன்பர்க் பெயர் பரிந்துரை

405 0

கடந்த 2018 ஆகஸ்ட் மாதம், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான பள்ளி மாணவர்கள் போராட்டத்தை ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியே கிரேட்டா துன்பெர்க் என்ற இளம் மாணவி தொடங்கினார்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘பிரைடேஸ் பார் பியூச்சர்’ என்ற ஹாஷ்டேக் உலக அளவில் பிரபலமானது. அந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கானோரை பங்கேற்கச் செய்ததில் கிரேட்டா முக்கிய உந்துசக்தியாக திகழ்ந்தார்.

இந்நிலையில் 2020-ம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு கிரேட்டா துன்பெர்க் மற்றும் ‘பிரைடேஸ் பார் பியூச்சர்’ அமைப்பின் பெயரை ஸ்வீடன் நாட்டின் இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் ஜென்ஸ் ஹோலம், ஹக்கன் ஸ்வென்னலிங் ஆகியோர் பரிந்துரை செய்துள்ளனர்.