கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

296 0

யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் இலங்கை கடற்படையும் மதுவரித்திணைக்களம் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.

நேற்று மாலை 5 மணியளவில் மதுவரித்திணைக்களம் இலங்கை கடற்படையில் இணைந்து குறித்த வீட்டில் சோதனை மேற்கொண்டபோது 180 கிலோ கிராம் நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டன.

இதன்போது குறித்த வீட்டில் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு இங்கு மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.