கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவை ஆரம்பம்!

207 0

யாழ்ப்பாணம் – பலாலி, கொழும்பு – ரத்மனாலை விமானசேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காலை 9.30 மணியளவில் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த 4R-EXN விமானம் 70 பயணிகளை ஏற்றியவாறு வந்தடைந்தது.

இன்றைய முதலாவது சேவையில் மீண்டும் வருகை தந்த பயணிகள் கொழும்பை நோக்கி 15 நிமிட இடைவெளியின் பின்னர் பயணித்தனர்.

குறித்த பயணத்திற்கான கட்டணம் 7,500 ரூபாவாக விடப்படுவதாக பயணிகள் தெரிவித்தனர்.