அரச கடமைக்கு இடையூறாக செயற்பட்ட வர்த்தகருக்கு விளக்கமறியல்!

57 0

மன்னார்-மடு பகுதியில் அரச கடமைக்கு இடையூறாக செயற்பட்ட வர்த்தகர் ஒருவரை எதிர்வரும் 5 ஆம் திகதி புதன் கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (31) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் நேற்று முந்தினம் வியாழக்கிழமை (30) வர்த்தக நிலையங்களுக்கான இரகசிய சுற்றி வளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

குறித்த நடவடிக்கையின் போது மடு திருத்தலத்தின் பிரதான நுழைவாயில் பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் கடை ஒன்றில் பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தியோகத்தர்கள் முனைந்தனர்.

இதன் போது குறித்த கடை ஒன்றின் உரிமையாளர் தகாத வார்த்தைகளினால் பேசி,கூரிய ஆயுதத்தினால் குறித்த உத்தியோகத்தர்களை தாக்க முற்பட்டுள்ளதோடு, அவர்களின் கடமைக்கும் இடை யூறு ஏற்படுத்தியுள்ளார்.

குறித்த விடையம் தொடர்பாக குறித்த உத்தியோகத்தர்கள் மடு பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கிய நிலையில் மடு பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று அந்த கடையின் உரிமையாளரை ;கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை(31) மன்னார் நீதிமன்றத்தில் அஜர் படுத்தப்பட்டார். இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர் வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.