நாட்டை வந்தடைந்தனர் மேலும் 40 மாணவர்கள்

507 0

உயர் கல்விக்காக சீனாவுக்கு சென்றிருந்த மேலும் 40 மாணவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை)  இரவு மற்றும் இன்று அதிகாலை வேளைகளிலேயே குறித்த மாணவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை சீனாவில் 284 இலங்கையர்கள் மாத்திரமே தற்போது உள்ளனர் எனவும் 580பேர் தற்போதைய நிலையில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றனர் எனவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத்த ஆரியசிங்ஹ தெரிவித்துள்ளார்.

மேலும் சீனாவின் வுஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு விசேட விமானத்தை அனுப்புவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையை சீன அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்  தற்போது மேலும் 40 மாணவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை சீனாவில் 9 ஆயிரத்து 692 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 213 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக  23 நாடுகளைச் சேர்ந்த 9,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.