தொல்பொருள் துறை திணைக்களத்தின் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோட்டை ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தின் முன்னால் அவர்கள் தங்கியிருந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது சேவை காலம் நிறைவடையவுள்ள நிலையில் குறித்த தொழில் நிரந்தரமாகும் வரை ஒப்பந்த காலத்தினை நீடிக்குமாறு கோரியே நேற்று முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை இவர்கள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

