கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக சீனா செல்லும் பயணிகளுக்கு சூடான உணவு, போர்வை, புத்தகங்கள் போன்றவை வழங்கப்பட மாட்டாது என, தைவானின் சீன ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
தனிமனித தொடர்புகளை தடுப்பதன் மூலம் வைரஸ் பரவுதலை தடுக்கலாம் என்ற முயற்சியில் அந்த ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது

