கட்சியின் செயற்குழுவில் இருந்து ரோஸி, இம்தியாஸ் ஆகியோரும் நீக்கம்

279 0

நேற்று (30) நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் இருந்து ரோஸி சேனாநாயக்க மற்றும் இம்தியாஸ் பாகிர் மாகார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி பெரேரா மற்றும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியதாக தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.