முகக்கவசங்ககளுக்கான அதிக பட்ச சில்லறை விலையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
தேசிய மருந்துக ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் 142 ஆவது பிரிவின் கீழ் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, பயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய முகக்கவசம் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 15 ரூபாவாகவும், பயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய சத்திரசிகிச்சை முகக் கவசமொன்றின் விலையும் 15 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் 95 ரக முகக்கவசமொன்றின் விலை 150 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இந்த வர்தமானி அறிவித்தலின் ஊடாக குறிப்பிட்டுள்ளது.
இந்த விலைகளுக்கு அதிகமாக முகக் கவசங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட 113 சுற்றிவளைப்புகளில் ஐவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மக்கள் அதிகளவான முகக் கவசங்களை வாங்க தொடங்கியுள்ளனர்,
அதன்படி 10 ரூபாவுக்கு விற்பனை செய்யக்கூடிய பயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய முகக்கவசம் ஒன்று 40 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

