கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணை வெளிநாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை!

255 0

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதாக இலங்கையில் அடையாளம் காணப்பட்ட சீனப் பெண்ணை, மேலதிக பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

43 வயதையுடைய குறித்த சீனப் பெண், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதாக நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டது.

சுற்றுலா மேற்கொள்ளும் நோக்கில் கடந்த 19 ஆம் திகதி அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது

குறித்த பெண்ணுடன் இலங்கைக்கு வருகை தந்த ஏனைய சீனப் பிரஜைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இதுவரையில் 106 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், 4515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் வூகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி, பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கொழும்பில் உள்ள தொற்று நோய்கள் தொடர்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.