சாரதி அனுமதி பத்திர வைத்திய அறிக்கை செயற்பாடுகள் இன்று முதல் இணையத்தில்

416 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் சாரதி அனுமதி பத்திரத்திற்கு தேவையான வைத்திய பரிசோதனைக்கான தினம் மற்றும் நேரம், என்பன இணையத்தில் நேரடியாக பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையம் இந்த வசதியை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில் இன்று முதல் மருத்துவ பரிசோதனைக்கான திகதி, நேரம் போன்றவை ஒன்லைன் முறையில் இணையத்திலேயே வெளியிடப்படும்.

www.ntmi.lk என்ற இணையத்தளத்தில் இன்றிலிருந்து இயங்க ஆரம்பிக்கும். இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பதாரியின் விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் மருத்துவ பரிசோதனைக்கான திகதி மற்றும் நேரம் வெளியிடப்படும்.

இதேவேளை அடுத்து வரும் இரண்டு வாரங்களில் கையடக்க தொலைபேசிகளில் இதற்கான விசேட செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும்.