தமிழகம் முழுவதும் குரூப்-4 முறைகேடு விசாரணை தீவிரம்; டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சிக்குகின்றனர்- ரூ.10 கோடி வரை லஞ்சம் கைமாறியதாக தகவல்

213 0

குரூப்-4 தேர்வு முறைகேட்டில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேர்வர்களிடம் இருந்து ரூ.10 கோடி வரை பணம் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர் கள் நிரந்தர தகுதி நீக்கம் செய்யப் பட்டு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் தரகராக செயல்பட்ட சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பள்ளிக்கல்வித் துறை அலு வலக உதவியாளர் ரமேஷ்(39), எரிசக்தி துறை அலுவலக உதவி யாளர் மாமல்லபுரம் திருக்குமரன் (35), தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற திருவல்லிக்கேணி நிதீஷ்குமார் (21) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அடுத்த விஜயாபதியை சேர்ந்த தரகர் ஐயப்பன், தேர்வர் முத்து ராமலிங்கம், விருத்தாசலம் மகா லட்சுமி ஆகிய 3 பேரிடம் சென்னை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர், சிவகங்கை, தஞ்சை, நெல்லை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய பண்ருட்டி அய்ய னார் கோயில் தெருவை சேர்ந்த சிவராஜ், புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த சீனிவாசன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

முக்கிய தரகர் தலைமறைவு

தமிழகத்தின் பல்வேறு பகுதி களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மோசடி கும்பலுக்கு சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என் பவர் ஒருங்கிணைப்பாளர் போல இருந்துள்ளார். அவர்தான் குரூப்-4 தேர்வு எழுதியவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு திட்டம் வகுத்து கொடுத்துள்ளார். தேர்வர்களிடம் இருந்து தலா ரூ.4 லட்சம் முதல் ரூ.12 லட்சம் என 99 பேரிடம் இருந்து ரூ.10 கோடி வரை வசூல் செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அவர் மூலம்தான் அனைத்து மோசடிகளும் நடந் துள்ளதாக கூறப்படுகிறது. தலை மறைவாக உள்ள அவர் பிடிபட்டால் குரூப்-4 முறைகேடு குறித்து முழுமையாக தெரிந்துவிடும் என்று சிபிசிஐடி அதிகாரிகள் கூறு கின்றனர்.

அதிகாரிகளுக்கு தொடர்பு

டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் (ஓஎம்ஆர் ஷீட்) அச்சடிக்கும் நிறு வனத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் மானாமதுரையில் இருக்கிறார். குரூப்-4 தேர்வுக்கான விடைத்தாளை கூடுதலாக அச்சடித்து, திருடி எடுத்துவந்த இவர், அதை டிஎன்பிஎஸ்சி பயிற்சி மைய நிர் வாகி ஒருவரிடம் பல லட்சங் களுக்கு விற்றுள்ளார். லஞ்சம் கொடுத்த தேர்வர்கள் அனைவரும் ராமநாதபுரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியுள்ளனர். அங்கு அவர்கள் தேர்வு எழுதி முடித்த பிறகு, அவர்களது விடைத்தாள்களை எடுத்துவிட்டு, அதே சீரியல் எண் ணுடன் ஏற்கெனவே அச்சடித்து வைக்கப்பட்ட விடைத்தாள்களில் சரியான விடைகளை எழுதி, அந்த விடைத்தாள்களை இடையில் சேர்த் துள்ளனர். இதற்கு தேர்வு மைய அதிகாரிகளும் உடந்தையாக இருந் துள்ளனர். இதையடுத்து, ராமேசு வரம், கீழக்கரை வட்டாட்சியர்கள், தேர்வு மைய அதிகாரிகள் உள் ளிட்ட 10 பேரிடம் சிபிசிஐடி போலீ ஸார் கடந்த 3 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அச்சக ஊழியரிடம் இருந்து விடைத்தாள்களை பெற்ற பயிற்சி மைய நிர்வாகி, டிஎன்பிஎஸ்சி அதி காரிகள் 2 பேரை தொடர்பு கொண்டு, அவர்கள் மூலமாகவே விடைத்தாள் களை மாற்றி வைத்து மோசடி செய்துள்ளார். சம்பந்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 2 பேரை சிபிசிஐடி அதிகாரிகள் கண்டுபிடித் துள்ளனர். அவர்களிடம் ரகசிய விசாரணை நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. மற்றபடி, மறையக்கூடிய சிறப்பு மை பேனாவால் தேர்வு எழுதியதாக கூறப்பட்டது, வழக்கை திசை திருப்பும் தகவல் கள் என்றும் சிபிசிஐடி அதிகாரிகள் கூறினர்.

வினாத்தாள் ரூ.12 லட்சம்?

தேர்வுக்கு முன்னதாக, அச்சடிக் கும் இடத்தில் இருந்து வினாத் தாளை திருடிவந்து, தேர்வர்களிடம் அதை ரூ.12 லட்சம் வரை விற்றதாக வும் கூறப்படுகிறது. இந்த கோணத் திலும் விசாரணை நடந்து வரு கிறது.

இதேபோல 2018-ல் நடந்த குரூப்-1, குரூப்-2 தேர்வுகளிலும் மோசடிகள் நடந்ததாக கூறப்படு கிறது. பல லட்சம் பேர் இத்தேர்வு களை எழுதியிருப்பதால் மறுதேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறினர்.

குரூப்-4 முறைகேட்டில் ஏற் கெனவே 3 பேர் கைது செய்யப் பட்ட நிலையில், தரகராக செயல் பட்ட சென்னை ஆவடி வெங்கட்ரம ணன் (38), தரகர்களுக்கு லஞ்சம் கொடுத்து முதல் 100 இடங்களுக் குள் வந்த ராமநாதபுரம் மாவட்டம் கோடனூர் கிராமம் வேல்முருகன் (31), கடலூர் ராஜசேகர் (26), சென்னை ஆவடி காலேஷா (29) ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். இவர் கள் 4 பேரும் எழும்பூர் குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை பிப்ரவரி 8-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க குற்றவியல் நடுவர் நாகராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து, 4 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.