சீனாவில் போக்குவரத்து தடையால் 4 கோடிக்கு அதிகமான மக்கள் பாதிப்பு

275 0

கரோனா வைரஸ் காரணமாக சீனாவில் போக்குவரத்திற்கு பெரும்பாலான இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போக்குவரத்து தடை காரணமாக சுமார் 4 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் சீனாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை இவ்வரைஸுக்கு சீனாவில் 25 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 835 பேருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனா முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நோய் பரவலைத் தடுக்க சீனாவில் 10 நகரங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

 

போக்குவரத்து தடை காரணமாக சுமார் 4 கோடிக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் பொழுதுபோக்கு இடங்கள், மதுபான கூடங்கள், திரையரங்குகள் போன்று பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களை மூடவும் சில நகரங்களில் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் புறப்பகுதிகளில் புதிதாக மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன.