குளவி கொட்டிக்கு இலக்காகி 30 பேர் பாதிப்பு

365 0
தலவாக்கலை வட்டகொட மேல் பிரிவு தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 30 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மரத்தில் கட்டியிருந்த குளவி கூட்டினை கழுகு ஒன்று தேன் குடிப்பதற்காக தாக்கியதனால் இந்த குளவிகள் களைந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளன.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 30 பேரில் 3 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் உட்பட 13 பேர் கடும் பாதிப்புக் குள்ளாகியிருப்பதாகவும் இவர்கள் தொடந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மலையக பகுதியில் வரட்சியான காலநிலை நிலவுவதனால் குளவி தாக்குதல்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.