அரசியலமைப்புச் சபை நாளை மறுதினம் (23) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றத்தில் அரசியலமைப்புச் சபையின் தலைவர் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இச்சபை கூடவுள்ளது.
இந்த அரசியலமைப்புச் சபையில் உறுப்பினர்களாக பத்துப் பேர் காணப்படுகின்றனர். பிரதமரும், எதிர்க் கட்சித் தலைவரும் ஏனைய உறுப்பினர்களாக கருதப்படுகின்றனர்.
அன்றைய தினம் நடைபெறவுள்ள அரசியலமைப்புச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தினால் பிரேரிக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்த தீர்மானம் மற்றும் நிதி ஆணைக்குழு உறுப்பினர்கள் என்பன தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி பொலிஸ் ஆணைக்குழு, லஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு என்பவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் அதிகாரம் அரசியலமைப்புச் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

