சஜித் பிரேமதாச வரப்பிரசாதங்களை பயன்படுத்தாது முன்மாதிரியைக் காட்டட்டும்- ரோஹித

284 0

ஜனாதிபதியாக வந்தால், ஜனாதிபதி மாளிகை, வாகன வசதிகள், வாசஸ்தலம் மற்றும் சம்பளம் போன்ற வரப்பிரசாதங்களை எடுப்பதில்லையென ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் கூறிவந்த சஜித் பிரேமதாச, தற்பொழுது அவருக்கு கிடைத்துள்ள எதிர்க் கட்சித் தலைமைப் பதவிக்கான வரப்பிரசாதங்களையும் பயன்படுத்தாது முன்மாதிரியைக் காட்டியிருக்கலாமே என இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.