நோர்வுட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவ எல்பட கீழ் பிரிவு தோட்ட பகுதியில் உள்ள தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 19 பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (21) இடம்பெற்றதாக தெரிவித்தனர்.
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவ முத்துலெச்சுமி தோட்டத்தில் 3 ஆண் தொழிலாளர்களும் பொகவந்தலாவ எல்பட தோட்டத்தில் 16 பேரும் மொத்தம் 19 பேர் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் மேலும் 3 பேர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

