தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை இல்லை!

201 0

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை இல்லை. எந்தவொரு வைபவத்திலும் எவரும் பாட முடியும் என தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அரச தகவல் தினைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ; ஊடகவியலார் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ; பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார் .
அவர் மேலும் கூறுகையில்,

”எந்தவொரு வைபவத்திலும் எவரும் பாட முடியும் தான் விரும்பிய மொழியில் தேசிய கீதத்தை பாட முடியும். தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை இல்லை. அவ்வாறு பாட முடியாதென உத்தியோகபூர்வமாக எதிலும் குறிப்பிடப்பட்டில்லை. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்த கருத்தையே அண்மையில் தெரிவித்திருந்தார்” என்றரர் .
தனிச் சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் பாட வேண்டும் விட ஒரு சாராரும் இ நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளான தமிழ் , சிங்களம் ஆகிய மொழிகளில் தேசிய கீதம் பாட வேண்டும் ஒரு சாரார் கூறப்பட்டு வருகின்றனர்

இந்நிலையில், அவரவரின் தாய் மொழியில் தேசிய கீதம் பாடும் போதுதான் அது உணர்வு பூர்வமாக இருக்கும் என கல்விமான்கள் ; மற்றும் புது ஜீவிகள் தெரிவிக்கின்றனர்