கூட்டமைப்பின் முதல் பாராளுமன்ற வேட்பாளரை அதிரடியாக அறிவித்தது ரெலோ

225 0

கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ரெலோவின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் யாரென பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், சிறந்த ஆளுமைமிக்கவரும், சமூக சேவையாளரும் ரெலோ கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுரேந்திரன் குருசாமியை (சுரேன்) ரெலோவின் தலைமை .அதிரடியாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ரெலோ கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ரெலோ கட்சி சார்பாக போட்டியிடுவதற்கான ஆசன ஒதுக்கீட்டில் விந்தன் கனகரட்ணம் தனக்கு ஆசனம் கேட்பதற்கு பதிலாக கட்சி உறுப்பினர் அல்லாத மூன்றாம் நபர் ஒருவருக்கு ஆசனம் கேட்டதாலேயே சர்ச்சை எழுந்தது.

மேலும் ரெலோ கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஆசனப் பங்கீடு தொடர்பில் எவ்வித முரண்பாடுகளும் கருத்து மோதல்களும் இடம்பெறவில்லை

பொதுத் தேர்தலில் ரெலோ கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விவரங்களை அறிவதற்காக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தமக்கு ஆசனம் கேட்பதற்கு பதிலாக கட்சியின் உறுப்பினர் அல்லாத மூன்றாம் நபர் ஒருவருக்கு ஆசனத்தை வழங்குமாறு கோரியிருந்தார். இந்த கோரிக்கை கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே சுரேந்திரனை களமிறக்குவதற்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் முடிவெடுக்கப்பட்டது குறித்த. கலந்துரையாடலில் இருந்த விந்தன் கனகரட்ணம் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது என குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.