கொக்கிலாய், வல்லப்பாடுகுடா கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது வெடிபொருட்களுடன் 4 டெட்டனேட்டர்களை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடிப்பதன் மூலம் கடல் சுற்றுச்சூழல் கடுமையாக சேதமடைகிறது. இதைத் தடுக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி கொக்கிலாய், வல்லப்பாடுகுடா கடற்கரையில் நேற்று (19) மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் பொது கடலோரத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சேலை நூல்களில் இணைக்கப்பட்ட 4 டெட்டனேட்டர்கள் மற்றும் டி.என்.டி உடன் அடையாளம் காணப்படாத 73 கிராம் வெடிபொருட்களை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் அடையாளம் காணப்படாத வெடிபொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளது.

