அம்பலாங்கொட, வெனமுல்ல ரயில் கடவையில் இன்று (20) காலை 7.30 அளவில் சொகுசு பஸ் ஒன்று ருகுணு குமாரி ரயிலில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த பஸ் வண்டியின் சாரதி பலபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த ரயில் கடவையில் பாதுகாப்பு வாயில் (கேட்) இல்லை எனவும் அங்கு ரயில் சமிஞ்சை விளக்குகள் மாத்திரமே காணப்படுவதாகவும் அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தினால் வெனமுல்ல பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும் குறித்த ரயில் கடவையின் ஊடாக இடம்பெறும் ரயில் போக்குவரத்து வழமை போல் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் கூறினார்.
விபத்து தொடர்பில் அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

