யாழ்.குற்றச் செயல்களுடன் இராணுவத்துக்குள்ள தொடர்பு

378 0

armyyயாழ்.குடாநாட்டில் குற்றச் செயல்களை மேற்கொள்ளும் குழுவினருக்கும் இராணுவத்துக்கும் இடையே தொடர்புகள் உள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதி ர்க்கட்சித்தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடக வியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். குடாநாட்டில் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதனை நாம் அவதானிக்க முடிகிறது. இச் செயல்களை மேற்கொண்டு வரும் குழுக்கள் இங்குள்ள மக்களுக்கு பெரும் அசௌகரியமாகவும் பெரும் நெருக்கடியாகவும்; இருக்கின்றன.

எனவே இக் குழுக்கள் தொடர்ச்சியாக இயங்கக்கூடாது. அவற்றை கட்டுப்படுத்துவதற்கும் முற்றாக இல்லாமல் செய்வதற்கும் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும்.

குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கும் இராணுவத்துக்கும் தொடர்புகள் காணப்படுவதாக மக்கள் மத்தியில் பொதுவான அபிப்பிராயம் காணப்படுகிறது.

அந்த அபிப்பிராயத்தை எவரும் உதாசீனம் செய்ய முடியாது. மக்கள் மத்தியில் நிலவிவரும் கருத்தை ஏற்று இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இரா.சம்பந்தன் தெரிவித்தார்.