CID-க்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் கொண்டுவரப்பட்ட TID

313 0

பயங்கரவாத விசாரணை பிரிவு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நுவன் வெதசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவீ செனவிரத்ன ஓய்வு பெற்றதன் பின்னர் குறித்த பதவி வெற்றிடத்திற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பயங்கரவாத விசாரணைப் பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் நுவன் வெதசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.